இந்த ஆர்வமூட்டும் வகுப்பறை விவாதத் தலைப்புகளின் ,மூலம் சுறுசுறுப்பான விவாதங்களை உருவாக்கி, வளரும் மனங்களுக்கு சவாலை ஏற்படுத்துங்கள்! கியாலோ எடுவில் உரையாடும் விவாதங்கள் மூலம் இந்த வகுப்பறை விவாதத் தலைப்புகளுக்கு உயிர் கொடுங்கள் – அனைத்திற்கும் மேலாக, இது முற்றிலும் இலவசம்!
வேடிக்கையான விவாதத் தலைப்புகள்
- பேய்கள் இருப்பது உண்மையா?
- வருட ஆரம்பத்தில் எடுக்கப்படும் சபதங்கள் பின்பற்றப்படுமா?
- தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறதா?
- ஏலியன்கள் இருக்கிறார்களா?
- பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்க்கப்படுமா?
- உங்கள் முழங்கை இடித்துக்கொள்வதை விட உங்கள் கால் விரலில் குத்தினால் அதிகமான வலி ஏற்படுமா?
- விடுமுறைக்கு மலைப்பிரதேசத்திற்குச் செல்வதை விட கடற்கரைக்குச் செல்வது சிறப்பாக இருக்குமா?
- தீபாவளி கொண்டாடுவது தேவையா?
- புத்தகங்களைப் படிப்பதை விட, அவற்றை வாசிப்பதைக் கேட்பது சிறந்ததா?
- பொங்கல் பண்டிகைக்கு வாங்கும் உடைகளைப் பள்ளிகளில் அணிவதற்கு அனுமதிக்க வேண்டுமா?
- குறும்புக்காரக் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகள் கொண்டு வர வேண்டுமா?
- முருகனின் வாகனமான மயிலின் வேலையைக் குறைக்க வேண்டுமா?
- அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு உடனடியாக மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்த வேண்டுமா?
- அப்பாவிகளைக் கொடுமைப்படுத்துபவர்கள் இருந்தால், அவர்களை எப்படித் தண்டிக்க வேண்டும்?
- குழந்தைகளுக்கு வளைவு எழுத்துக்களைக் கற்பிக்க வேண்டுமா?
- மக்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதை அனுமதிக்க வேண்டுமா?
- எந்த நாட்டிற்கு சுற்றுலா சென்றால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்?
- எந்த வீடியோ கேம் கன்சோல் சிறப்பானது?
வரலாறு குறித்த விவாதத் தலைப்புகள்
- எந்த நாட்டிற்குச் சென்றால் நன்றாக இருக்கும்: பண்டைய எகிப்தா அல்லது பண்டைய கிரேக்கமா?
- வாழ்வதற்குச் சிறந்த நாடாக இருந்தது எது?: பண்டைய ஏதென்ஸா அல்லது ஸ்பார்டாவா?
- ஏதெனிய ஜனநாயகம் எந்த அளவிற்கு ஜனநாயகத் தன்மையுடன் இருந்தது?
- அலெக்சாண்டர் தி கிரேட்டை நாம் உயர்வாக மதிக்க வேண்டுமா?
- மங்கோலியர்களின் வெற்றிகள் கடைசியில் நல்ல விஷயமாக இருந்ததா?
- 1947 க்கு முன் இந்தியாவில் மத சகிப்புத்தன்மை இருந்ததா?
- எவ்வாறு ரோமானியப் பேரரசு மிகப் பெரியதாக மாறியது?
- தொழிற்புரட்சி சமூகத்திற்கு நல்லதாக இருந்ததா?
- உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தொழில்நுட்பம் எது: ரயில் பாதையா, நீராவிக் கப்பலா அல்லது தந்தியா?
- ஜப்பான் மீது மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுத் தாக்குதல் நியாயமானதா?
- ஜாலியன் வாலாபாக் படுகொலையால் எந்த அளவிற்கு மக்கள் எழுச்சி ஏற்பட்டது?
- எந்த அளவிற்குப் புதிய அரசியல் கருத்துக்களால் 1848 புரட்சிகள் ஈர்க்கப்பட்டன?
- உப்புச் சத்தியாகிரகத்திற்கான முக்கியக் காரணம் எது?
- வெர்சாய்ஸ் ஒப்பந்தம் இரண்டாம் உலகப் போருக்கு முக்கியக் காரணமாக இருந்ததா?
- மிகவும் குறிப்பிடத்தக்க இந்தியப் பிரதமர் யார்?
- பனிப்போர் வெடித்ததற்கு அமெரிக்கா காரணமாக இருந்ததா?
- முதலாம் உலகப் போருக்கு முக்கிய காரணமாக இருந்தது எது?
- இப்போதும் நாம் காந்தியடிகள் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டுமா?
- பிரிட்டிஷ் அருங்காட்சியகம் கலைப்பொருட்களை அவற்றின் சொந்த நாடுகளுக்குத் திருப்பித் தர வேண்டுமா?
- வளரும் நாடுகளில் உள்ள தங்கள் முன்னாள் காலனிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் இழப்பீடு வழங்க வேண்டுமா?
குடிமையியல் குறித்த விவாதத் தலைப்புகள்
- பள்ளிகளில் பொதுப் பிரார்த்தனையை அனுமதிக்க வேண்டுமா?
- தேவாலயத்தையும் அரசையும் பிரிக்க வேண்டும் என்பதற்கான வலுவான வாதம் என்ன?
- தடுப்பூசிகளைக் கட்டாயமாக்க வேண்டுமா?
- மக்களாட்சி ஒரு நல்ல அரசாங்க வடிவமா?
- பருவநிலைக் கொள்கையை அரசியல்வாதிகள் இல்லாமல், நிபுணர்கள் குழு தான் முடிவு செய்ய வேண்டுமா?
- மக்கள் சொந்தமாகத் தனிப்பட்ட வாகனங்களை வைத்திருக்க வேண்டுமா?
- எதிர்காலத்தில் பொது நூலகங்களின் பங்களிப்பு உள்ளதா?
- ஒரு உலகளாவிய மொழி இருந்தால் சிறப்பாக இருக்குமா?
- குடிமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமா?
- 16 வயதானவர்களைப் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமா?
- நேரடி மக்களாட்சியால் கிடைக்கும் நன்மைகள் செலவுகளை விட அதிகமாக உள்ளதா?
- வாக்களிப்பதற்கு குடிமக்கள் அரசியல் அறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா?
- பொதுச் சொத்துக்களின் மூலம் ஒருவர் பயனடைந்தால், அதற்கு வரி செலுத்த வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறதா?
- அமைதியாகப் போராடுவதற்கு சிறந்த முறை எது?
- மதுவிலக்கு நடவடிக்கை ஒரு விரும்பத்தக்க கொள்கையா?
- முடியாட்சிகளை ஒழிக்க வேண்டுமா?
- ஜிஎஸ்டி பற்றிய சமூக ஊடக விளக்கங்கள் அல்லது பொருளாதார விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையாக உள்ளதா?
- இன்று தமிழ்நாடு அரசுக் கொள்கையில் அதிக செல்வாக்கு செலுத்துபவர்கள் யார்?
- உள்நாட்டு விஷயங்களில் அக்கறை செலுத்துவதை விட சர்வதேச விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமா?
- ஆரோக்கியமற்ற உணவுக்கு வரி விதிக்க வேண்டுமா?
கல்வி குறித்த விவாதத் தலைப்புகள்
- வீட்டுப்பாடத்தை தடை செய்ய வேண்டுமா?
- தேர்வுகளைத் தடை செய்ய வேண்டுமா?
- மாணவர்கள் பள்ளிச் சீருடையை அணிய வேண்டுமா?
- காலாண்டு விடுமுறைக்குப் பிறகு மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்த வேண்டுமா?
- பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு பருவத்தை வெளிநாட்டில் கழிப்பதைக் கட்டாயமாக்க வேண்டுமா?
- பள்ளியில் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கலாமா?
- பள்ளிகளில் கலை மற்றும் இசையைக் கற்பிக்க வேண்டுமா?
- பள்ளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதை ஒழிக்க வேண்டுமா?
- என்றேனும் ஆசிரியர்களுக்கு மாற்றாகத் தொழில்நுட்பம் இருக்குமா?
- தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஹிந்தியை மொழிப்பாடமாக வைக்க வேண்டுமா?
- மாணவர்கள் அனைவருக்கும் நிதிசார் கல்வியறிவு வகுப்புகளை நடத்த வேண்டுமா?
- பள்ளியில் மாணவர்களுக்குப் பாலியல் கல்வி வகுப்புகளை நடத்த வேண்டுமா?
- கணக்குப் பாடம் கற்குமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டுமா?
- பள்ளிகளைப் பிற்பகலில் ஆரம்பிக்க வேண்டுமா?
- தொடக்கப்பள்ளியிலும், உயர்நிலைப் பள்ளியிலும் ஊட்டச்சத்து வகுப்பைச் சேர்க்க வேண்டுமா?
அரசியல் மற்றும் சட்ட விவாதத் தலைப்புகள்
- இந்தியத் தேர்தல்களில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டுமா?
- பாராளுமன்றத்தில் சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்துவதற்காக இட ஒதுக்கீடுகளை நாடுகள் வழங்க வேண்டுமா?
- ஆயுத மோதலுக்கான முக்கியக் காரணமாக இருப்பது எது: “பேராசையா” அல்லது “குறைகளா”?
- எப்போதாவது போரை நியாயப்படுத்த முடியுமா?
- பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் தான் மக்கள் எழுச்சி ஏற்படுகிறதா?
- பலவீனமான சர்வாதிகாரங்களை விட நிலையான சர்வாதிகாரத்தால் தான் பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர அதிக வாய்ப்பு இருக்கிறதா?
- சில சந்தர்ப்பங்களில் ஜனநாயகத்தை விட சர்வாதிகாரம் விரும்பத்தக்கதாக உள்ளதா?
- வேறு எந்த வகையான அரசியல் அமைப்பையும் விட தேசிய அரசுகள் சிறந்ததா?
- மக்களாட்சியுடன் தேசியவாதத்தால் இணக்கமாக இருக்க முடியுமா?
- தேர்தல் பிரச்சாரங்களுக்காக அளிக்கப்படும் தனியார் நன்கொடைகளுக்கு ஒரு வரம்பு இருக்க வேண்டுமா?
- நீதிபதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமா?
- மார்க்ஸின் மதிப்புக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளக்கூடியதா?
- மருந்துகளுக்கான அறிவுசார் சொத்துரிமையை ஒழிக்க வேண்டுமா?
- எவ்வாறு இந்திய அரசியலமைப்பை சிறப்பாக விளக்கலாம்?
- குற்றவியல் நீதி அமைப்பின் மிக முக்கியமான நோக்கம் எது?
- சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய அனைத்துக் குற்றங்களிலிருந்தும் கடுமையான குற்றவியல் பொறுப்பை நீக்க வேண்டுமா?
- சமூக ஊடகங்கள் மக்களாட்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளதா அல்லது நன்மையா உள்ளதா?
தொழில்நுட்பம் குறித்த விவாதத் தலைப்புகள்
- காகிதம் மற்றும் புத்தகங்களுக்குப் பதிலாக டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டுமா?
- குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டுமா?
- டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை சட்டத்தின் மூலம் வரைமுறைப்படுத்த வேண்டுமா?
- பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை நாம் நிறுத்த வேண்டுமா?
- சமூக ஊடக வலைத்தளங்களுக்குப் பிரபலங்களை தளத்திலிருந்து நீக்க உரிமை உள்ளதா?
- ஸ்மார்ட்போன் நம்முடைய புத்திசாலித்தனத்தைக் குறைக்கிறதா?
- எந்த சமூக ஊடகத் தளத்தை தடை செய்வது சிறப்பாக இருக்கும்?
- கோடிங் பள்ளியில் ஒரு கட்டாய பாடமாக இடம்பெற வேண்டுமா?
- ஓப்பன் சோர்ஸ் மென்பொருளில் தீமைகளை விட அதிக நன்மைகள் உள்ளதா?
- பாதுகாப்பை விட ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புகள் முக்கியமானவையா?
- தொழில்நுட்பம் நமது புத்திசாலித்தனத்தைக் குறைக்கிறதா?
- மொபைல் போன்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளதா?
- மனிதர்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளை இயந்திரங்கள் செய்வதற்கு வாய்ப்புள்ளது என்பது நல்ல விஷயமா?
- ஒட்டுமொத்தமாக இணையம் என்பது சமூகத்திற்கு நல்ல விஷயமா?
- அரசானது இணைய நடுநிலையைப் பாதுகாக்க வேண்டுமா?
இலக்கியம் குறித்த விவாதத் தலைப்புகள்
- பள்ளிகள் புத்தகங்களைத் தடை செய்யும் வகையில் இருக்க வேண்டுமா?
- பொன்னியின் செல்வனில் குந்தவை தேவி நல்லவரா?
- கம்ப ராமாயணத்தில் விபீஷணன் ராவணனை விட்டுப் பிரிந்து, ராமரிடம் சென்றது சரியா அல்லது தவறா?
- சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்ததற்கான காரணம் என்ன?
- மஹாபாரதத்தில் கர்ணன் கௌரவர்களை ஆதரித்தது ஏன்?
- கம்ப ராமாயணத்தில் வாலிக்கும், சுக்ரீவனுக்கும் பகை ஏற்படக் காரணம் என்ன?
- திருக்குறளில் உள்ள அறத்துப்பாலில் திருவள்ளுவர் விவரித்துள்ள கருத்துக்கள் யாவை?
- சிலப்பதிகாரத்தில் வரும் ‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்’ என்ற சொற்றொடரின் பொருள் என்ன?
- திருக்குறளில் உள்ள பொருட்பால் எதைப் பற்றிக் கூறுகிறது?
- கம்ப ராமாயணத்தில் இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும் போது தடுத்த ஜடாயுவிற்கு என்ன நேர்ந்தது?
- சீவகச் சிந்தாமணியில் சீவகன் எவ்வாறு போர் புரிந்து, வெற்றி பெற்றான்?
- மஹாபாரதத்தில் பாண்டவர்களைக் கொல்வதற்கு துரியோதனன் செய்த தந்திரம் என்ன?
- தெனாலிராமனின் புத்திசாலித்தனத்திற்கு எடுத்துக்காட்டான கதை ஒன்றைக் கூறுக?
- மஹாபாரத குருஷேத்திரப் போரில் அபிமன்யுவின் பங்கு என்ன?
- கம்ப ராமாயணத்தில் அனுமன் இலங்கைக்குத் தீ வைக்கக் காரணமாக அமைந்தது எது?
- நாடகங்கள் அல்லது நாவல்கள் எவை சிறந்தவை?
கலைகள் குறித்த விவாதத் தலைப்புகள்
- டிஜிட்டல் ஓவிய அனுபவங்கள் கைகளால் வரையப்படும் ஓவியங்களுக்கு மாற்றாக மாறுமா?
- கலைக்கு அரசு நிதியுதவியளிக்க வேண்டுமா?
- NFT-கள் கலைக்கு நல்லவையா?
- சமகால சமூகத்தில் ஜாஸ் இசை புறக்கணிக்கப்படுகிறதா?
- இசையின் முக்கிய நோக்கம் என்ன?
- தரமற்ற கலைகளை அரசு தடை செய்ய வேண்டுமா?
- சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கலை ஒரு சிறந்த முறையாக இருக்குமா?
- கலைகளுக்குப் பரிசுகள் வழங்க வேண்டுமா?
- ஓவியத்தின் அர்த்தத்தை யார் தீர்மானிக்கிறார்?
- கலையைக் கலைஞரிடமிருந்து பிரிக்க முடியுமா?
- சங்க காலத்தில் தமிழர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த கலைகள் யாவை?
- சுருக்க ஓவியத்தை (abstract art) விட பிரதிநிதித்துவ ஓவியம் உயர்ந்ததா?
- அருங்காட்சியகங்கள் அரசுக்குச் சொந்தமானவையாக இருக்க வேண்டுமா?
- நவீன ஓவியம் பாரம்பரிய ஓவியத்துடன் சேர்ந்ததாக உள்ளதா?
- கிராஃபிட்டி ஒரு கலையா?
- ஃபேஷன் ஒரு கலையா?
- வீடியோ கேம்களை கலையாகக் கருத வேண்டுமா?
- கலை ஒரு நோக்கத்திற்கு உதவ வேண்டுமா, அல்லது அது அதன் படைப்பிற்காக மதிப்புமிக்கதாக இருக்க வேண்டுமா?
அறிவியல் குறித்த விவாதத் தலைப்புகள்
- வெளிப்புற விண்வெளியை ஆராய வேண்டியது அவசியமா?
- பல்லுயிரியலைப் பாதுகாக்க நாம் போதுமான முயற்சிகள் எடுக்கிறோமா?
- புளூட்டோவை ஒரு கிரகமாகக் கருத வேண்டுமா?
- நாம் வேறு கிரகங்களில் குடியேற வேண்டுமா?
- கால அட்டவணையை வேறு விதமாக ஒழுங்கமைக்க வேண்டுமா?
- மனித மருத்துவர்களுக்குப் பதிலாக தானியங்கி மருத்துவர்களை உருவாக்க வேண்டுமா?
- புதுமைகளை விட முடிவுகளை மீண்டும் உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் முன்னுரிமை அளிக்க வேண்டுமா?
- விலங்குப் பரிசோதனையைத் தடை செய்ய வேண்டுமா?
- எந்த மாற்று ஆற்றல் மூலம் சிறந்தது?
- ஸ்டெம் செல் பரிசோதனையைத் தடை செய்ய வேண்டுமா?
- மனிதக் கருக்களின் மரபணுப் பொறியியலைத் தடை செய்ய வேண்டுமா?
- பரிணாம வளர்ச்சிக்கு வலிமையான ஆதரவை வழங்கும் சான்றுகள் எவை?
- அழிவு நீக்கம் செய்வதற்கான செலவு நியாயமானதா?
- மனிதர்களுக்கு செயற்கைக் கருப்பைகளை உருவாக்க வேண்டுமா?
- கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்க வேண்டுமா?
- மிருகக்காட்சி சாலைகளைத் தடை செய்ய வேண்டுமா?
- மரபணுரீதியாக மாற்றியமைக்கப்பட பயிர்களைத் தடை செய்ய வேண்டுமா?
- மின்சார உற்பத்திக்கு அணுசக்தி சிறந்த தேர்வாக உள்ளதா?
சுற்றுச்சூழல் குறித்த விவாதத் தலைப்புகள்
- மின்சாரக் காரை வாங்குவது சிறந்ததா அல்லது பெட்ரோல் காரை வாங்குவது சிறந்ததா?
- புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறந்த வடிவம் எது?
- பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய கடற்கரையோரங்களில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு மாற்றத் தொடங்க வேண்டுமா?
- ஃப்ராக்கிங்கைத் தடை செய்ய வேண்டுமா?
- பருவநிலை மாற்றத்திற்குத் தனிநபர்கள் பொறுப்பேற்க வேண்டுமா?
- தனிப்பட்ட பாதுகாப்பு முயற்சிகள் மூலம் வெற்றிகரமாகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியுமா?
- குளிர்ச்சியான சூழல்களில் தாவர பண்புகளைத் தீர்மானிப்பதில் மண்ணை விடப் பருவநிலை முக்கியமானதா?
- சுரங்கத் தொழிலைத் தடை செய்ய வேண்டுமா?
- பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்ய வேண்டுமா?
- ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளைத் தடை செய்ய வேண்டுமா?
- ஆய்வகங்களில் வளர்க்கப்படும் இறைச்சி பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான பயனுள்ள கருவியாக இருக்க முடியுமா?
- பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க மக்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதைக் குறைக்க வேண்டுமா?
- பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சரிசெய்ய புவிசார் பொறியியலைப் பயன்படுத்த வேண்டுமா?
- மனிதர்கள் விலங்குகளை சாப்பிட வேண்டுமா?
மனிதப் புவியியல் குறித்த விவாதத் தலைப்புகள்
- வளர்ச்சி இடைவெளிகளைக் குறைக்க சுற்றுலா உதவுகிறதா?
- விவசாய நிலங்களை மீண்டும் காடுகளாக மாற்றுவது நல்ல யோசனையா?
- 2050 ஆம் ஆண்டுக்குள் உலகம் பெரிய உணவுப் பஞ்ச நெருக்கடியை எதிர்கொள்ளுமா?
- மனிதர்களின் நடவடிக்கைகளால் பல்வேறு உயிரினங்களின் இடம் பெயர்தல் பாதிப்படைந்துள்ளதா?
- கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயரும் போக்கு நல்ல விஷயமா?
- பெருநகரங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்ன?
- அரசுகள் மக்கள் தொகைக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா?
- நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அவற்றை விரிவுபடுத்துவது நல்ல விஷயமா?
- சுற்றுச்சூழலுக்கு தீமை ஏற்படுத்தாத நகரங்களை உருவாக்குவது சாத்தியமா?
- நீங்கள் படித்த ஒரு நாட்டில் உலகமயமாக்கல் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?
- நகர்ப்புறத்தில் மக்கள் அடர்த்தி அதிகரிப்பது நல்ல விஷயமா?
- அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாக்க நாம் செயல்பட வேண்டுமா?
தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்த விவாதத் தலைப்புகள்
- மதம் இல்லாமல் ஒழுக்கம் இருக்க முடியுமா?
- மக்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பது ஒழுக்கக்கேடானதா?
- போர் ஒரு அவசியமான தீமையா?
- எதிர்மறை வாழ்க்கை அனுபவங்கள் கற்பனைத்திறன் செயல்முறைக்கு உதவுகிறதா?
- மத நம்பிக்கை அறிவியலுடன் ஒத்துப்போகிறதா?
- மனிதர்களை குளோனிங் செய்வது சட்டப்பூர்வமானதா?
- கட்டாய உறுப்பு தானம் நெறிமுறைக்கு உட்பட்டதா?
- மரண தண்டனை அவசியமா?
- அமைதியை விட நீதி முக்கியமா?
- நமது உணர்வுகளை நம்பலாமா?
- ஜான் ஸ்டூவர்ட் மில்லின் தீங்கு கொள்கைக்கு ஏற்றவாறு பேசுவதை ஒழுங்குபடுத்த வேண்டுமா?
- உண்மையிலேயே பரந்த, உலகளாவிய நெறிமுறைகள் சாத்தியமற்றதா?
பொருளாதாரம் மற்றும் வணிகம் குறித்த விவாதத் தலைப்புகள்
- குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டுமா?
- அதிக வரிகள் இருப்பது சிறந்ததா அல்லது குறைவான வரிகள் இருப்பது சிறந்ததா?
- டிப்ஸ் கொடுக்கும் கலாச்சாரம் கடந்த காலத்தில் இருந்த ஒன்றாக மாற வேண்டுமா?
- மக்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாமா?
- எந்தச் சூழ்நிலையில் விரிவாக்க பணக் கொள்கைகள் அதிக பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வாய்ப்புள்ளது?
- சமத்துவமின்மையை அளவிடுவதற்கு கினி குணகம் ஒரு சிறந்த வழியாக உள்ளதா?
- சமீபத்தில் பணக்கார நாடுகளில் சமத்துவமின்மை அதிகரிப்பது தொழிற்சங்க சக்தி குறைந்து வருவதன் விளைவா?
- விலை வரம்புகள் ஒரு பயனுள்ள பொருளாதார கருவியா?
- விலைக் குறைப்புகள் ஒரு பயனுள்ள பொருளாதார கருவியா?
- முழு வேலைவாய்ப்பை நாடுகள் ஒரு பொருளாதார இலக்காகக் கொள்ள வேண்டுமா?
- சமூகம் வேகமான ஃபேஷனை நிராகரிக்க வேண்டுமா?
- கூகுள் போன்ற நிறுவனங்களின் கலாச்சாரம் பாரம்பரிய நிறுவனங்களை விட விரும்பத்தக்கதா?
- வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்கான சிறந்த முறை எது (எ.கா. இணைப்பு, கையகப்படுத்தல், மூலோபாயக் கூட்டணி)?
- உள்ளகத் தொழில் முனைவு ஒரு வணிகத்தின் செயல்திறனை எந்த அளவிற்கு மேம்படுத்துகிறது?
- “அதிகார மட்டங்களைக் குறைப்பது”, ஒரு வணிகம் அதிக லாபம் ஈட்டுவதற்கான பயனுள்ள உத்தியா?
- நீங்கள் ஃபேர்டிரேடை வாங்கலாமா?
- அனுபவத்தை விடக் கல்வித் தகுதிகள் மதிப்புவாய்ந்தவையா?
- நிறுவனங்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?
- வேலை நேரத்தை வாரத்திற்கு 40 மணி நேரமாகக் குறைக்க வேண்டுமா?
சர்வதேச உறவுகள் குறித்த விவாதத் தலைப்புகள்
- சர்வதேச வர்த்தகத் தடைகளைக் குறைக்க வேண்டுமா?
- WTO மற்றும் IMF போன்ற சர்வதேசப் பொருளாதார அமைப்புகள் தாராளமயக் கோட்பாட்டாளர்களின் எண்ணத்திற்கேற்ப செயல்படுகின்றனவா அல்லது யதார்த்தவாதத்தின் தர்க்கத்தை எடுத்துக்காட்டுகின்றனவா?
- சில நாடுகள் பொருளாதார ரீதியாக தொடர்ந்து வளர்ந்து வரும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனவா?
- அமெரிக்க-சீன உறவு புதிய பனிப்போராக உள்ளதா?
- இரு-அரசுகள் தீர்மானம் இறந்து விட்டதா?
- வெளிநாடுகளுக்கு உதவுவதற்காக அரசுகள் பணத்தைச் செலவிடலாமா?
- இப்போதும் சர்வதேச உறவுகளில் மாநிலங்கள் முக்கியப் பங்காற்றுகின்றனவா?
- ஜனநாயக நாடுகள் ஒன்றுடன் ஒன்று போரில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவா?
- “ஒரு நாடு, இரண்டு அமைப்புகள் (one country, two systems)” ஏற்பாட்டின் கீழ் ஹாங்காங் சிறப்பாக இருந்ததா அல்லது இப்போது உள்ளவாறு சீனாவின் ஒரு பகுதியாக சிறப்பாக இருக்கிறதா?
- கியூபாவின் மீதான அமெரிக்காவின் வர்த்தகத் தடை நியாயமானதா?
- சர்வதேசச் சட்டம் என்பது உண்மையிலேயே சட்டமாக உள்ளதா?
- அமைதியை உருவாக்க எப்போதாவது பலத்தை உபயோகிக்க வேண்டுமா?
மேலும் கூடுதல் மொழிகளில் விவாதத் தலைப்புகளை எதிர்பார்க்கிறீர்களா? நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்! நீங்கள் எந்த மொழியில் கற்பித்தாலும், ஆர்வமூட்டும் வகுப்பு விவாதங்களை மாணவர்களுடன் மேற்கொள்ள எங்கள் விரிவான தொகுப்பை ஆராயுங்கள்.